search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய பெண் குழந்தை தினம்"

    • பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்கு பங்காற்றிய 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
    • ஜனவரி மாதம் 24-ந்தேதி தேசிய பெண் குழந்தை தினத்தன்று இந்த விருது வழங்கப்படும்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும், பாடுபட்டு வீர தீர செயல் புரிந்துவரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் விதமாக ஜனவரி மாதம் 24-ந்தேதி தேசிய பெண் குழந்தை தினத்தன்று விருது வழங்கப்பட உள்ளது.

    குறிப்பாக, பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான மற்றும் தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி இருத்தல் மற்றும் ஆண்கள் மட்டும் சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்றவற்றில் வீர தீர செயல் புரிந்து, 31.12. 2021-ன்படி 5 முதல் 18 வயதிற்குட்பட்ட தமிழ கத்தில் வசிக்கும் பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது குழந்தையின் பெயர், தாய்,தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீரதீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும்.

    மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் இந்த அம்சங்களில் சிறந்து விளங்கும் ஒரு பெண் குழந்தை தேர்ந்தெ டுக்கப்பட்டு பாராட்டு பத்தி ரம் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்படும். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் சேலம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற 25-ந்தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    ×